தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
gold

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.43,680-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை விலை குறைந்த நிலையில், நேற்று தங்கம் விலை உயர்ந்தது. கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 43 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.43,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5 உயர்ந்து ரூ.5,455-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ரூ.76.70 ஆக விற்பனை செய்யப்பட்டது.  

gold

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.43,680-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,460-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் 78-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 1300 ரூபாய் உயர்ந்து ரூ.78,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.