மீண்டும் அதிகரித்த தங்கம் விலை - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.43,840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 43,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5,475 ஆக விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 79.50க்கும், ஒரு கிலோ வெள்ளி 79,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold

இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.43,840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,480க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி 80,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.