மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை! - இல்லத்தரசிகள் அதிர்ச்சி

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 42,360 ரூபாக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்க்ம் விலை குறைந்து வந்தது.  நேற்று முன்தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 42,848 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நேற்றும் ஆபரண தங்கத்தின் விலை குறைந்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.528 குறைந்து ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

gold

இந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 42,360 ரூபாக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம்  5295 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் உயர்ந்து-ரூ.73.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளி 73 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.