மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் கவலை!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 42 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. கடந்த புதன் கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.528 குறைந்து ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.  நேற்று முன் தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 42,360 ரூபாக்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம்  42,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஒரு கிராம் தங்கம் 10 ரூபாய் குறைந்து ரூ.5,285க்கு விற்பனையானது.

gold

இந்த நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 42 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிராம் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 305 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிராம் ரூ.74.50க்கும், ஒரு கிலோ வெள்ளி 74 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.