அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் அதிர்ச்சி

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 43,280 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று  முன் தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 43,040 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே நேற்று ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.64 குறைந்து ஒரு சவரன் ரூ.42,976 ஆகவும், கிராமுக்கு ரூ.8 குறைந்து ஒரு கிராம் ரூ.5,372 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.  வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. 

gold

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 43,280 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5, 410 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50 ஆகவும்,  கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து ரூ.75,500 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.