தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்த தங்கம் விலை!

 
gold

சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.45,600 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.  நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 232 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 45,488 ரூபாயாக ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 29 ரூபாய் குறைந்து 5,686 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே நேற்று தங்கம் விலை அதிகரித்தது. நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.45,560 ஆக விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து   ரூ.5,695-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 70 பைசா உயர்ந்து ரூ.77.70-ஆக விற்பனை செய்யப்பட்டது.

gold

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.45,600 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து  ரூ.5,700க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூ.77.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.