அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை...அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..

 
தங்கம் விலை சரிவு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344  உயர்ந்து ரூ37,224க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் வாங்குவதில் எப்போதுமே பெண்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுவர்.  ஆபரணங்கள் அணிந்து பார்ப்பதில் மகிழ்ச்சி என்றாலும், தங்கத்தில்  முதலீடு என்பது எப்போதுமே  சிறந்த சேமிப்பாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடனேயே  இருந்து வருகிறது.  ஏதோ ஒரு நாள் தங்கத்தின் விலை குறையும்போது , அடுத்த நாளே பெரிய அளவில் விலை அதிகரித்து விடுகிறது. இந்நிலையில் இன்று  தங்கம் விலை சவரனுக்கு  344 ரூபாய் அதிகரித்திருக்கிறது.

தங்கம் விலை

சென்னையில் நேற்று  ஒரு கிராம் தங்கம்  4,610 ரூபாயாக இருந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ 36,880  க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று  கிராமுக்கு 43  ரூபாய் அதிகரித்து   ரூ. 4,653 க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு சவரன்  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 37,224  ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

அதேபோல், சென்னையில் நேற்று  ரூ66.90 க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி விலை இன்று 50  காசுகள் குறைந்துள்ளது.  ஒரு கிராம் வெள்ளி 67. 40 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 67,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.