ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
gold

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் ஆபரண தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 5,365 ரூபாய்க்கு விற்பனையானது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 42,920 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா குறைந்து 74 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளி 200 ரூபாய் குறைந்து 74,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.42,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.8 உயர்ந்து ரூ.5,373-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல வெள்ளியின் விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.74,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.