தொடர் சரிவில் தங்கம் விலை - மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

 
gold

சென்னையில் இன்று  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரை குறைந்து 41,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
சென்னையில் கடந்த சில வாரங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது. இந்த நிலையில், நேற்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்தது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.41,960க்கு விற்பனை செய்யப்பட்டது.  கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,245க்கு விற்கப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.71.50க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி 71 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 5,235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் வரை குறைந்து 41,880 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது வெள்ளி விலை கிராமுக்கு 60 பைசா குறைந்து 70.90 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி  70,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.