தொடர் சரிவில் தங்கம் விலை - மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

 
gold

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 44,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக சென்னையில் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தது. இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் கடந்த சனிக்கிழமை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,400க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5,550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.44,320க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து 5,540 ரூபாய் ஆக விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் எந்தமாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00 எனவும், கிலோ ஒன்றிற்கு ரூ.76,000 எனவும் விற்பனையானது. 

இந்நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 44,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிராம் தங்கம் கிராமுக்கு 30 குறைந்து 5,510க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை பொறுத்தவரை சில்லறை வர்த்தகத்தில் 30 காசுகள் குறைந்து 75.70க்கும், ஒரு கிலோ வெள்ளி 55,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.