தொடர் சரிவில் தங்கம் விலை - இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 44,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை குறைந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை சென்னையில் தங்கம் விலை குறைந்தது. சென்னையில்  சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.44, 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒருகிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.5 ஆயிரத்து 560க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து ரூ.77.70க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் .44,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,535 ரூபாய் ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.77.10 எனவும், கிலோ ஒன்றிற்கு 600 ரூபாய் குறைந்து ரூ.77,100 எனவும் விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.