சரிந்தது தங்கம் விலை - இல்லத்தரசிகள் சற்று நிம்மதி!

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து  ஒரு சவரன் ரூ. 45 ஆயிரத்து 440க்கு விற்பனையாகிறது.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் இலை உயர்ந்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து சவரன் 45 ஆயிரம் ரூபாயை தாண்டியது.  அதன்படி ஒரு சவரன் ரூ. 45,040க்கு விற்கப்பட்டது. அதேபோல் வெள்ளி விலையும் 20 காசுகள் உயர்ந்து 80 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனையானது. இதேபோல் நேற்று சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து,  ஒரு சவரன் ரூ.  45,440க்கு விற்பனையானது.  கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் அதிகரித்து , ரூ. 81.40 காசுகளுக்கு விற்பனையானது.  

இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ஒரு சவரன் ரூ. 45 ஆயிரத்து 408க்கு விற்பனையாகிறது. இதேபோல் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.4 குறைந்து  5,676 ரூபாய் ஆக விற்பனை செய்யபட்டு வருகிறது. வெள்ளி விலை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து  ரூ.81.80 எனவும், ஒரு கிலோ வெள்ளி 400 ரூபாய் அதிகரித்து ரூ.81,800 எனவும் விற்பனையாகிறது.