தங்கம் வாங்க நல்ல நேரம் - அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!

 
gold gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 45,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் நேற்று தங்கம் விலை அதிகரித்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.  சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.45,320 ஆக விற்பனையானது. இதேபோல் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து 5,665 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.81.00 எனவும், ஒரு கிலோ  வெள்ளி ரூ.81,000 எனவும் விற்பனையானது. 

இந்நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 45,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 15 குறைந்து 5,650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.81.00 எனவும், ஒரு கிலோ  வெள்ளி ரூ.81,000 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.