இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! - தங்கம் விலை குறைந்தது

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 160 ரூபாய் குறைந்து சவரன் ரூ.44,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்த நிலையில் நேற்று குறைந்தது. நேற்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2  குறைந்து 5,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சவரனுக்கு ரூ. 16 குறைந்து ரூ.45,120 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது.  சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 160 ரூபாய் குறைந்து சவரன் ரூ.44,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.5,620-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் குறைந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 80,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.