தொடர் சரிவில் தங்கம் விலை - மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,280-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.44,440க்கும்,  அதேபோல் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 5,555க்கும் விற்பனை செய்யப்பட்டது.  இதேபோல் நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 44 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5,545க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

gold

இந்நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,280-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.5,535-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் குறைந்துள்ளது. சென்னையில் வெள்ளி ஒரு கிராமிற்கு 50 பைசாக்கள் குறைந்து ரூ.80.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 குறைந்து ரூ.80,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.