அதிரடியாக குறைந்த தங்கம் விலை! - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

 
gold gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்க்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 44,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. நேற்று முன் தினம் சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 136 அதிகரித்து 44,416க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,552க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 224 அதிகரித்து ஒரு சவரன் 44,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.28 அதிகரித்து ரூ. 5,580-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வெள்ளி விலையும் அதிகரித்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.78.40க்கும், ஒரு கிலோ ரூ.1000 அதிகரித்து ரூ. 78,400க்கும்  விற்பனையானது.

gold

இந்நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்க்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 44,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் 5,550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது.  வெள்ளி விலையும் கிராமுக்கு அதிரடியாக ரூ.2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 2000 அதிகரித்து ரூ.79,500ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.