மீண்டும் அதிகரித்த தங்கம் விலை! - இல்லத்தரசிகள் கவலை!

 
gold

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. வாரத்தின் முதல் நாளான நேற்று சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.44,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம்  ரூ.5,550க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி சில்லறை விற்பனையில் ஒரு கிராம் ரூ.80க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி  ரூ.80,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

gold

இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 81.00 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 81,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.