இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி - அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 44,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதனிடையே வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை விலை மாற்றமின்றி அதே விலையில் நீடித்தது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன்  44,440 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல் ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை மாற்றமின்றி 5,555 ரூபாய்க்கு விற்பனையானது. 

gold

இந்த நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 44,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து  ஒரு கிராம் தங்கம் 5,540 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 77.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ஆயிரம் ரூபாய் குறைந்து 77,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.