தங்கம் வாங்க உடனே கிளம்புங்க.. சவரனுக்கு ரூ.200 குறைந்திருக்கிறது.

 
இன்றைய தங்க மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.200  சரிந்திருக்கிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

 கடந்த மாத  இறுதியில் தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்பட்டாலும்,  இந்த மாதத்தின் முதல் நாளான ஜூன் 1  விலை அதிரடியாக குறைந்து காணப்பட்டது. அதாவது  கடந்த 29 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத்தங்கம்  ரூ. 38,200க்கும்,  30 ஆம் தேதி 38, 280 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.  ஆனால் ஜூன் 1ம் தேதியன்று  அதிரடியாக,   சவரனுக்கு ரூ. 280 குறைந்து ரூ. 37,920 க்கு விற்பனை செய்யப்பட்டது.  ஜூன் 2 ஆம் தேதியன்று ரூ.160 அதிகரித்த நிலையில்,   நேற்று  யாரும் எதிர்பாராத விதமாக  தங்கம் விலை 400 ரூபாய் வரை ஏற்றம் கண்டது.  நேற்றையதினம் ஒரு கிராம்  ரூ.  4,810 க்கும்,  ஒரு சவரன் ரூ.  38,480 க்கும் விற்பனையானது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இந்நிலையில் இன்று  சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹280 குறைந்துள்ளது.  ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ₹4,775-க்கும், ஒரு சவரன் ₹38,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் இன்று  வெள்ளி விலையும் சற்று சரிவை சந்தித்திருக்கிறது.  சென்னையில் சில்லறை விற்பனையில் நேற்று  68. 50 ரூபாய்க்கு விற்பனையான வெள்ளி, இன்று  1ரூபாய் குறைந்திருக்கிறது. அதன்படி சென்னையில் ஒரு கிராம்  வெள்ளி ₹67.50-க்கும்,  ஒரு கிலோ வெள்ளி ரூ.67,500க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.