அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! ஒரு சவரன் ரூ.67,000ஐ நெருங்குகிறது!

 
gold

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.66,720க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. கடந்த திங்கள் கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.65,720க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய் கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.65,480க்கு விற்பனையானது. புதன் கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.65,560க்கு விற்பனையானது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.65,880க்கு விற்பனையானது.

இந்த நிலையில்,  இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.66,720க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் கிராமுக்கு ரூ.105 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,340க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். 
 
 

News Hub