வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - சவரன் ரூ.70,000ஐ தாண்டியது!

 
gold

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,160க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.66,280க்கு விற்பனையானது. செவ்வாய் கிழமை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.65,800க்கு விற்பனையானது. புதன் கிழமை சவரனுக்கு  ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.66,320க்கு விற்பனையானது. விழாழனன்று சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.68,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.69,960க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,160க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,770 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 4 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4,360 உயர்ந்துள்ளது.