இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை!

 
gold gold

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.69,760க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. நேற்று முன் தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,440க்கு விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.68,880க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.69,760க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் கிராமுக்கு 110 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 8,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.