இன்றும் குறைந்தது தங்கம் விலை...ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

 
gold gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.58,960க்கு விற்பனை
 செய்யப்பட்டு வருகிறது. 

சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் சென்னையில் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.  சென்னையில் கடந்த புதன் கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.59,520க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 7,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.   தீபாவளி தினமான நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து 59 ஆயிரத்து 640க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,455க்கு விற்பனை செய்யப்ட்டது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து 59 ஆயிரத்து 080க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 385 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.58,960க்கு விற்பனை  செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 370 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இரண்டு நாட்களாக குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.