தங்கம் விலையில் அதிரடி மாற்றமா? - இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,040க்கு விற்பனையானது. செவ்வாய் கிழமை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.69,760க்கு விற்பனையானது. புதன் கிழமை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.70,520க்கு விற்பனையானது. நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ.840 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,360க்கு விற்பனையானது. இதேபோல் நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,560க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை ஒரு சவரன் ரூ.71,560க்கு, ஒரு கிராம் ரூ.8,945 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


