தங்கம் விலையில் அதிரடி மாற்றம்? இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

 
gold gold

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.69,760க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. புதன் கிழமை சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,440க்கு விற்பனையானது. விழாழனன்று சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.68,880க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று சவரனுக்கு ரூ.880 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.69,760க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.69,760க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் ஒரு கிராம் 8,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.