தொடர்ந்து 4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து நான்காவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. அதன் படி ஒரு சவரன்  45,200 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களா ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு 352 ரூபாய் அதிகரித்து, புதிய உச்சத்தை தொட்டது.  அதன்படி சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை 22 கேரட்  ஆபரணத் தங்கம் விலை கிராம் ரூ. 5,720க்கும்,  ஒரு சவரன் ரூ. 45,760 க்கும் விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தங்கம் விலை குறைந்தது. சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ. 45,200 -க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 70 குறைந்து ரூ. 5,650-க்கு விற்பனை ஆனது. இதேபோல் அன்றைய தினம் வெள்ளி விலையும் குறைந்தது. ஒரு கிராமுக்கு ரூ.1.50 குறைந்து ரூ.81.50 எனவும், ஒரு கிலோ  வெள்ளி ரூ.81,500 எனவும் விற்பனையானது.

இந்நிலையில், தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலை மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகி வருகிறது. அதன் படி ஒரு சவரன்  45,200 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.5,650-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அட்சய திருதி நெருங்கி வரும் நிலையில், தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை ஆகி வருவதால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.