மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த தங்கம்... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 உயர்வு..!!
சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது.
அதன் படி சனிக்கிழமை (நவம்பர் 22) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,630க்கும் சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.93,040க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.11,520க்கும் சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.92,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை (நவ.25) ரூ.1600 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் நேற்று (நவ.24) ரூ. 92,160க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.1600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.93,760க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.11,520க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.174க்கும், ஒரு கிலோ ரூ.1,74,000க்கும் விற்பனையாகிறது


