மீண்டும் ஒடிடி-யில் 'குட் பேட் அக்லி'... இளையராஜா பாடல்கள் நீக்கமா ?

 
1 1

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ரிலீசாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த படம் குட் பேட் அக்லி. இந்த படத்துக்கு எதிராக இசைஞானி இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். ‘குட் பேட் அக்லி’ படத்தில் அனுமதியில்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இந்தப் படத்தில் இளையராஜா இசையமைத்த ஒத்த ரூபா தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி மற்றும் இளமை இதோ இதோ உள்ளிட்ட பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

இந்தப் பாடல்கள் தனது அனுமதி இல்லாமல் படத்தில் இடம்பெற்றதாகக் கூறி இளையராஜா தரப்பிலிருந்து 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டது. மேலும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இளையராஜா சார்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் அண்மையில் திடீரென குட் பேட் அக்லி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டது. இளையராஜா தொடர்ந்துள்ள வழக்கு காரணமாக குட் பேட் அக்லி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் பரவின.சில நாள் இடைவெளிக்குப் பிறகு தற்போது அந்தப் பாடல்கள் இல்லாமல் மீண்டும் ஓடிடியில் படத்தை இணைத்துள்ளனர். அந்தப் பாடல்களுக்குப் பதிலாக வேறு இசையை சேர்த்துள்ளனர். ஆனால், அவை பொருத்தமாக இல்லை.

மேலும், நீதிமன்றத்திலும் மைத்ரி நிறுவனம் மேல் முறையீடு செய்துள்ளது.