குட் நியூஸ்..!! இனி PF கணக்கில் இருக்கும் பணத்தை நொடியில் உப்பி மூலம் எடுக்கலாம்..!!
Feb 10, 2026, 10:20 IST1770699000136
பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை ஏடிஎம் வாயிலாகவும் யுபிஐ செயலிகள் வாயிலாகவும் எடுத்துக் கொள்ளக் கூடிய வசதி விரைவில் கொண்டுவரப்படும் என கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. கோடிக்கணக்கான பிஎஃப் சந்தாதாரங்களுக்கு இது மிகப்பெரிய ஒரு அறிவிப்பாக இருந்தது.
இந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களுடைய பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை நேரடியாக யுபிஐ செயலிகள் வாயிலாக எடுக்கக்கூடிய வசதி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுவதாக தெரிவித்து இருக்கிறது. இதற்காக புதிய மொபைல் செயலியை இபிஎஃப் அமைப்பு அறிமுகம் செய்ய உள்ளதாக கூறுகிறது.
சந்தாதாரர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்துக் கொள்ள முடியும்
தற்போது எப்படி நம் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை டிஜிட்டல் ரீதியிலாக நம் செல்போனில் ஒரு செயலி வாயிலாகவே மேலாண்மை செய்கிறோமோ அதேபோன்ற ஒரு சேவையை கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறது ஈபிஎஃப்ஓ அமைப்பு.


