குட் நியூஸ்..! காரைக்குடி ரயில் நிலையம் உலக தரத்திற்கு மாற்றம்..!
காரைக்குடி ரயில் நிலையத்தை தினந்தோறும் 6000 பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இது திருச்சி, மானாமதுரை, திருவாரூர் போன்ற ரயில் நிலையங்களில் இருந்து வரும் ரயில்களை கையாளும் முக்கிய சந்திப்பு ரயில் நிலையம் ஆகும். இங்கு தினந்தோறும் இயக்கப்படும் 22 ரயில்கள் மூலம் சராசரியாக ரூ.1.8 லட்சம் வருமானம் ஈட்டப்படுகிறது.
ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, பல புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் புதிய தோரண நுழைவு வாயில்கள், விசாலமான மேற்கூரையுடன் கூடிய ரயில் நிலையக் கட்டடத்தின் முன்பகுதி, செட்டிநாடு பாணியில் முழுவதும் மூடப்பட்ட பாதசாரிகள் நடைபாதை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும், பயணிகள் மற்றும் வாகனங்கள் எளிதாகச் சென்று வர வெளி வளாகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தின் முகப்பு நவீனப்படுத்தப்பட்டுள்ளதுடன், தற்போதுள்ள நடை மேம்பாலம் மேம்படுத்தப்பட்டு, 6 மீட்டர் அகலத்தில் ஒரு புதிய நடை மேம்பாலமும் கட்டப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எனத் தனித்தனி ஒப்பனை அறைகளுடன் கூடிய புதிய, விசாலமான, குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறையும் உருவாக்கப்பட்டுள்ளது.
இவை தவிர, ஐந்து நடைமேடைகளையும் இணைக்கும் வகையில் மூன்று மின் தூக்கிகள், நடைமேடைகளில் கூடுதல் இருக்கைகள், உள்ளூர் கலாச்சாரத்தை விளக்கும் வண்ண ஓவியங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளப்பாதைகள், சிறப்பு கழிப்பறைகள் மற்றும் பயணச்சீட்டு பதிவு சாளரங்கள் போன்ற வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. கண் கவர் 'கால்வேல்யூம்' தகடுகளால் ஆன நடைமேடை மேற்கூரைகள், முதல் நடைமேடையின் தரைதள மேம்பாடு, மின்னணு தகவல் பலகைகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 200 இருசக்கர வாகனங்கள் மற்றும் 26 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் மேற்கூரையுடன் கூடிய புதிய வாகன காப்பகங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
🌟 செட்டிநாட்டின் பெருமை! காரைக்குடி ரயில் நிலையம் உலகத் தரத்துக்கு மாற்றம்! ₹20.34 கோடியில் பிரமாண்ட வசதிகள்! 🕌🚂
— Tamil Nadu Rail Info | தமிழக ரெயில் தகவல் (@TN_RailNews) December 2, 2025
தமிழ்நாட்டின் செட்டிநாட்டுக் கட்டிடக்கலை மற்றும் பாரம்பரியத்தின் தலைநகராக விளங்கும் காரைக்குடி ரயில் நிலையம், அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் (Amrit… pic.twitter.com/HpeNHLpJ2s


