குட் நியூஸ்..! பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு..!
பொங்கல் பண்டிகை ஆனது இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படும் திருவிழாவாகும் .தமிழகத்தில் தமிழர் திருநாளாகவும், மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி ஆகவும் கொண்டாடப்படுகிறது .பொங்கல் என்றால் பொங்கி வழிதல் ,பொங்குதல் என்று பொருள் .புதிய பானையில் புத்தரிசி இட்டு அது பொங்கி வழிந்து வருவதால் நம் வாழ்வும் வளமும் மகிழ்ச்சியும் பொங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழகத்தில் நான்கு நாட்கள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது .மார்கழியின் கடைசி நாளில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது இந்திர விழா என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.
உழவு தொழிலையே அடிப்படையாகக் கொண்ட நம் முன்னோர்கள் உழவுக்கு உதவி செய்த ஆதித்த பகவானுக்கும், மாடுகளுக்கும் ,விவசாயத்திற்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தை மாதத்தை மகர மாதம் எனவும் கூறுவார்கள். இந்த தை மாதத்தின் முதல் நாளில் சூரியனை வழிபடுவது சிறப்பாகும்.
2026ம் ஆண்டு ஜனவரி மாதம் வரும் பொங்கல் பண்டிகைக்கு எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதாவது ஜனவரி 15 வியாழக்கிழமை தை பொங்கல், ஜனவரி 16 வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினம், ஜனவரி 17 சனிக்கிழமை உழவர் திருநாள் வருகிறது. ஜனவரி 18 ஞாயிற்றுக்கிழமை வந்துவிடுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாள் அதாவது ஜனவரி 14ம் தேதி புதன் கிழமை போகி என்பதால் அன்றைய தினம் ஒவ்வொரு ஆண்டும் அரசு விடுமுறை அளித்து வருகிறது. இந்த விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


