சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ்..! நாளை உங்களுக்கு இலவச பேருந்து பயணம்..!

 
1

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. நாளை தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய 5 நிமிடத்திற்குள்ளேயே விற்றுத் தீர்ந்தது. 

இந்நிலையில்,  ஐபிஎல் போட்டி தொடரின் முதல்நாள் ஆட்டத்தை காண சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு வருபவர்கள், இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

சென்னை சூப்பர்கிங்ஸ் நிறுவனம், மாநகரப் போக்குவரத்து கழகத்தில் முன்னதாக பணம் செலுத்தி, போட்டியை காண வருபவர்களின் வசதிக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதனால், கிரிக்கெட் ரசிகர்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • இந்த வசதியை பயன்படுத்த பயணிகள் Online / pre printed டிக்கெட் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
  • நடத்துனர் அதனை சரிபார்த்த பின்னரே பயணிக்க முடியும். 
  • போட்டி நடைபெறும் நாளில் மட்டுமே பயணம் செய்ய அனுமதி.
  • குளிர் சாதன பேருந்துகளில் இந்த வசதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.