சபரிமலை வரும் பக்தர்களுக்கு குட் நியூஸ்..! பாயசம், அப்பளத்துடன் கூடிய மதிய உணவு..!
சபரிமலையில் நேற்று மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க துவங்கியதால் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஸ்பாட் புக்கிங், அதிகபட்ச எண்ணிக்கையான 5000 ஐ எட்டி உள்ளது. இந்நிலையில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களையும், சோர்வுடன் மலையேறி வரும் பக்தர்களையும் மகிழ்விப்பதற்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டு புதிய ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த ஆண்டு சபரிமலை வரும் பக்தர்களுக்கு வழக்கமான அன்னதானத்தில் பரிமாறப்படும் உணவுகளுக்கு பதில், சுவையான கேரள சத்யா உணவுகளை பரிமாற தேவசம் போர்டு திட்டமிட்டுள்ளது. சபரிமலையில் நேற்று மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க துவங்கியதால் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஸ்பாட் புக்கிங், அதிகபட்ச எண்ணிக்கையான 5000 ஐ எட்டி உள்ளது. இந்நிலையில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களையும், சோர்வுடன் மலையேறி வரும் பக்தர்களையும் மகிழ்விப்பதற்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டு புதிய ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த ஆண்டு சபரிமலை வரும் பக்தர்களுக்கு வழக்கமான அன்னதானத்தில் பரிமாறப்படும் உணவுகளுக்கு பதில், சுவையான கேரள சத்யா உணவுகளை பரிமாற தேவசம் போர்டு திட்டமிட்டுள்ளது.
கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானத்தில் வழங்கப்பட்டு வந்த வழக்கமான புலாவ், சாம்பார் சாதத்திற்கு பதிலாகப் பாயசம், அப்பளம், காய்கறிகளுடன் கூடிய முழுமையான ‘கேரள சத்யா’ உணவு வழங்கப்படும் எனவும் இத்திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
அது மட்டுமின்றி வரிசையில் காத்திருக்கும் பக்தர்களையும் உற்சாகப்படுத்துவதற்காக ஐயப்பன் பக்தி பாடல்களை பாடுவதற்கும் பாரம்பரிய மங்கள இசை வாத்தியங்களை இசைத்து இசை கச்சேரி நடத்துவதற்கும் தேவசம் போர்டு சார்பில் இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமப்படுவதை தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளும், அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. இது பக்தர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நிலக்கல்லில் இருந்தே பக்தர்கள் ஒழுங்குபடுத்தி அனுப்பப்படுவதால் பம்பையில் கூட்ட நெரிசல் இன்று பக்தர்கள் மலையேறி, சன்னிதானம் நோக்கி செல்ல முடிகிறது.அது மட்டுமின்றி வரிசையில் காத்திருக்கும் பக்தர்களையும் உற்சாகப்படுத்துவதற்காக ஐயப்பன் பக்தி பாடல்களை பாடுவதற்கும் பாரம்பரிய மங்கள இசை வாத்தியங்களை இசைத்து இசை கச்சேரி நடத்துவதற்கும் தேவசம் போர்டு சார்பில் இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமப்படுவதை தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளும், அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. இது பக்தர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நிலக்கல்லில் இருந்தே பக்தர்கள் ஒழுங்குபடுத்தி அனுப்பப்படுவதால் பம்பையில் கூட்ட நெரிசல் இன்று பக்தர்கள் மலையேறி, சன்னிதானம் நோக்கி செல்ல முடிகிறது.
இதனிடையே சபரிமலையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள்குறித்து மாநில டி.ஜி.பி. ரவடா சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுவாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஜனவரி 10ம் தேதிவரை நிறைவடைந்துள்ளதாகவும் பக்தர்களின் வருகையைப் பொறுத்து ஸ்பாட் புக்கிங் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.