பயணிகளுக்கு குட் நியூஸ்..! இனி ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளிலும் பெட் சீட், தலையணை வழங்க முடிவு..!

 
1 1

நாட்டில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் ரயில் சேவைகளை பயன்படுத்தி தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று வருகின்றார்கள். குறிப்பாக சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் அதிகமானோர் ரயில்களில் பயணம் செய்து சொந்த ஊர் செல்கின்றனர். பயணிகளின் நலன் கருதி ரயில்வே நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அந்தவகையில், ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கான புதிய சேவையை ரயில்வே நிர்வாகம்  தற்போது அறிமுகம் செய்துள்ளது.

பொதுவாக ரயில் பயணங்களில் ஏசி வகுப்புகளில் மட்டுமே பெட் சீட் மற்றும் தலையணை கொடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளிலும் இனி பெட் சீட், தலையணை கொடுக்கும் வசதி கொண்டுவரப்பட உள்ளது. 2026 ஜனவரி 1ம் தேதி முதல் பெட் சீட், தலையணை கொடுக்கும் வசதி கொண்டுவரப்பட உள்ளது. பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் ரிசர்வ் செய்யும்போதே இந்த வசதியை பெற்றுக் கொள்ளலாம்.இல்லையென்றால் ரயிலில் பயணிக்கும்போது, உரிய கட்டணம் செலுத்தியும் வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.