வெயிலுக்கு குட் பை.. இந்த அக்டோபரில் தமிழகத்திற்கு தகிட தகிட தான்.. - தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்..
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இனி மழை தொடங்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நாளை முதல் தென் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையும். குறிப்பாக திருச்சி, மதுரை, ஈரோடு, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இன்றும், நாளையும் வெயில் குறையும். இதுவரை வறண்ட வானிலை நிலவிய தென் மற்றும் கொங்கு மண்டலத்திலும் மழை படிப்படியா அதிகரிக்கும்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நகர்வதன் மூலம் தமிழ்நாட்டிற்கு அக்டோபர் மாதத்தில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை என பல இடங்களில் நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை பெய்த நிலையில், நேற்று மழை இல்லை. பெரும்பாலான நேரங்களில் இதுபோன்று இந்நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள வட தமிழக மாவட்டங்களில் இன்று இரவு மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.வட தமிழகம் மட்டுமின்றி, தென் தமிழகம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா பகுதிகளிலும் மழை பெய்யும்.
இது ஒரு ஆரம்பம் மட்டுமே, அது இன்னும் போகப்போக சிறப்பாகவும் இருக்கும். வரலாற்றில் இதுவரை வெப்பமான நாட்கள் இருந்தால், அதனைத்தொடர்ந்து சீரான மழைப்பொழிவும் இருக்கும். அதன்படி மதுரை-திருச்சி-புதுக்கோட்டை-சிவகங்கை பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு.
மேலும், இந்தியா மற்றும் வங்காள தேசம் இடையிலான டெஸ்ட் போட்டி - முதல் 3 நாட்கள் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. நிறைய மழை இடைவெளிகள் வரலாம். இடைவேளை.. மழை.. , இடைவேளை - மழை என்பது போன்றே இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.