பிரதமர் மோடியுடன் கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு

 
அ

கூகுள் தலைமைச் செயல் அதிகாரி, பிரதமரைச் சந்தித்தார்


கூகுள் தலைமைச் செயல் அதிகாரி திரு சுந்தர் பிச்சை, பிரதமர் திரு நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்தார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மோடி கூறியிருப்பதாவது, “டெல்லியில்  செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டிற்கு இடையே திரு சுந்தர் பிச்சையை சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது. செயற்கை நுண்ணறிவில்  இந்தியா மேற்கொண்டு வரும் பணிகள் மற்றும் இத்துறையில் நமது திறமைமிக்க மாணவர்கள், நிபுணர்கள் ஆகியோருடன் கூகுள் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பது குறித்து உரையாடினோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.