விபத்தில் சிக்கிய அரசுப் பேருந்து மீது மோதிய தனியார் பேருந்து
May 12, 2024, 11:45 IST1715494552000
கடலூர் அருகே தனியார் மற்றும் அரசு பேருந்து மோதல் 25 பேர் காயமடைந்தனர்.

புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்று அரசு பேருந்து ரெட்டிசாவடி அருகே சென்டர் மீடியன் கட்டை மீது மோதியது. இதனை அறியாமல் சென்னையில் இருந்து வேளாங்கண்ணி சென்ற ஆம்னி பேருந்தும் அரசு பேருந்து மீது மோதியது. இதில் அரசு பேருந்தில் வந்த 25 பயணிகள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பயணிகள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக கடலூர் - புதுச்சேரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


