#BREAKING அரசு ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 அபராதம்!

 
office office

புதுச்சேரி சட்டப்பேரவையில் கோப்புகள் தாமதமானால் அரசு ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

puducherry

புதுச்சேரி சட்டசபை இன்று காலை 9.35 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தில் இரங்கல் குறிப்பை சபாநாயகர் செல்வம் வாசித்தார். முதல் நிகழ்வாக சபாநாயகர் செல்வம் இரங்கல் குறிப்பு வாசித்தார். மறைந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ், கேரளா முன்னாள் முதல்அமைச்சர் அச்சுதானந்தம், ஜார்கண்ட் முதல்அமைச்சர் சிபுசோரன், புதுவை முன்னாள் அதிமுக எம்எல்ஏ சிவலோகநாதன், மறைந்த கவர்னர் இல.கணேசன் ஆகியோரின் இரங்கல் குறிப்புகளை வாசித்தார். தொடர்ந்து சபை உறுப்பினர்கள் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து வணிகம் செய்தலை எளிதாக்கும் சட்டமுன்வரைவு, சரக்கு சேவை வரி சட்ட திருத்த மசோதா சபையில் தாக்கல் செய்யப்பட்டது. 

அதேபோல் கோப்புகள் தாமதமானால் அரசு ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, உரிய காரணம் இல்லாமல் கோப்புகளை தேக்கி வைத்திருத்தல் மற்றும் தாமதப்படுத்தும் அரசு ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்படும். இதனால், அரசு பணிகள் காலதாமதம் இல்லாமல் முடிக்கப்படும் என கூறப்படுகிறது. இதேபோல் தொழில்கள் தொடங்க காலவரம்புக்குள்  தடையில்லா ஆணை வழங்காவிட்டால் அபராதம் சட்டசபையில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.