ரூ.70 கோடியில் ஊட்டி ரேஸ் கோர்ஸ் பூங்கா அமைக்க அரசாணை

 
ooty ooty

உதகையில் மெட்ராஸ் ரேஸ் கிளப்பிடம் இருந்து மீட்கப்பட்ட 54 ஏக்கர் நிலத்தில் பூங்கா அமைக்க ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊட்டியில் மெட்ராஸ் ரேஸ் கிளப்பிடம் இருந்து 54 ஏக்கர் நிலத்தை தமிழக வருவாய் துறை மீட்டது. இதனைத் தொடர்ந்து இந்த நிலம் தோட்டக்கலை துறையிடன் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஊட்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் பகுதியில் சூழல் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, இந்த பணிகளை மேற்கொள்ள 70 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, முதல் கட்டமாக 21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சுற்றுச் சுவர், முகப்பு, மழை நீர் வடிகால், மின்சார பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளப்படவுள்ளது.