15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு

 
assembly

15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஆறு மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பெண் சிறப்பு படை ஐஜியாக பவானீஸ்வரி நியமனம் 

தமிழ்நாடு காவல்துறை தலைமையக ஐஜியாக அவினாஷ் குமார் நியமனம்

சிவில் சப்ளைஸ் சிஐடி டிஐஜியாக வெங்கட்ராமன் நியமனம்

வடக்கு மண்டல ஐஜியாக ப்ரவீன் குமார் அபிநபு நியமனம்

சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக சரவண சுந்தர் நியமனம்

வேலூர் சரக டிஐஜியாக ஜே.மகேஷ் நியமனம்

சென்னை மாநகர சட்டம், ஒழுங்கு இணை ஆணையராக பி.விஜயகுமார் நியமனம்

தூத்துக்குடி எஸ்பியாக அபிஷேக் குப்தா நியமனம்

நீலகிரி எஸ்பியாக எஸ்.பிருந்தா நியமனம்

கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியாக ஷானாஸ் நியமனம்

காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பியாக அரவிந்த் நியமனம்

திருவாரூர் மாவட்ட எஸ்பியாக சதீஷ்குமார் நியமனம்

புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக ரவீந்திரகுமார் நியமனம்

கோவை மாவட்ட எஸ்பியாக இருந்த கார்த்திகேயன், தாம்பரம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமனம்

பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கடராமன் குடிமைப் பொருள் வழங்கல் டிஜிபியாக நியமனம்