தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

 
முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி.. முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி..

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

rn ravi

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, 8 தனியார் பல்கலைக்கழங்கள் தொடர்பாக தனியார் பல்கலைக்கழங்கள் திருத்த சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு பொது கட்டிட உரிம திருத்த சட்ட மசோதாக ஆகிய 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 

ஏப்ரல் 9ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில், ஏப்ரல் 11ம் தேதி தமிழ்நாடு அரசின் அரசிதழில் இந்த சட்ட மசோதாக்களும்  வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது "சட்டவிரோதம்" என்று என்றும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8ம் தேதி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 9ம் தேதி இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.