அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல்

 
 அண்ணாமலை

அறிஞர் அண்ணாவை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பொய்யான தகவலை பரப்பி வருவதாக சமூக ஆர்வலர் பியூஷ் கோயல் வழக்கு தொடர்ந்து இருந்தார். சேலம் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் அளித்த புகாரின்பேரில், அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசின் செயலாளர் நந்தகுமார் அனுமதி அளித்துள்ளார்.

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்வதற்கான அனுமதி நகல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. தொடர்ந்து அண்ணாமலை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, “என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது. உண்மையை பேசியதற்காக என் மீது வழக்கு போடுகின்றனர். போதைப் பொருள் வியாபாரிக்கு கட்சியில் பொறுப்பு வழங்கிய உண்மை நிலை மக்களுக்கு தெரியும்” எனக் கூறியுள்ளார்.