பல்கலைக்கழகங்களில் குறித்த நேரத்தில் பட்டமளிப்பு விழா நடத்துக - ஆளுநர் அறிவுறுத்தல்..

 
rn ravi

தமிழ்நாட்டின் அனைத்து அரசு பல்கலைக்கழகங்களும் குறித்த நேரத்தில் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் எனவும்,  ஆராய்ச்சி மற்றும் கல்வித் திறனை மேம்படுத்த வேண்டும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறுத்து ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “ ஆளுநர் மற்றும் தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் அவர்கள் நமது மாநிலத்தில் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். ஆளுநர்-வேந்தர் அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களும் பட்டமளிப்பு விழாக்களைக் குறித்த நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்று என்று வலியுறுத்தி வருகிறார். 1.4.2023 முதல் 31.7.2024 வரை, 20 மாநிலப் பல்கலைக்கழகங்களில் 18 பல்கலைக்கழகங்களுக்கு  பட்டமளிப்பு நடத்தப்பட்டுள்ளது. 

 துணைவேந்தர் பதவி காலியாக உள்ள சந்தர்ப்பங்களில், பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கான செயல்முறையைத் தொடங்குமாறு துணைவேந்தர் ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர்களுக்கு முறைப்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் (அக்டோபர் 31, 2024-க்குள்) பத்து பல்கலைக்கழகங்களுக்கு பட்டமளிப்பு நடத்த முன்மொழியப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவர்கள் தங்களது பட்டச் சான்றிதழ்களை உடனடியாகவும் தாமதமின்றி பெறுவதை உறுதி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பட்டமளிப்பு விழா: ஓரே மேடையில் பங்கேற்கவுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி...

ஆளுநர்-வேந்தர் அவர்கள் தேசிய தகுதித் தேர்வு உதவித்தொகைப் (NET/JRF) பெற ஆய்வு மாணவர்கள், முதுகலை மாணவர்களுக்கு வழிகாட்டுதல், ஊக்கத்தையும்  வழங்குமாறு துணைவேந்தர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த முன்முயற்சியானது ஆராய்ச்சிப் பணியின் தரத்தை உயர்த்துவதையும், மேம்பட்ட உதவித்தொகைகள் மூலம் அறிஞர்களுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் அவர்கள் புகழ்பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் தொழிலை மேற்கொள்வதற்கான பரந்த வாய்ப்புகளைப் பெறுவதையும் உறுதிசெய்கிறது.

குறிப்பாக STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) துறைகளில் காப்புரிமை விண்ணப்பங்களை செப்பம் செய்வதை அதிகரிப்பதில் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்க துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுடன் ஒத்துழைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதன் விளைவாக, மாநிலப் பல்கலைக்கழகங்கள் பெற்ற காப்புரிமைகளின் எண்ணிக்கை 2021-22ல் 206 இல் இருந்து 2023-24ல் 386- ஆக உயர்ந்துள்ளது.

தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பின் (NIRF) முதல் 20 இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களையும் பல்கலைக்கழகங்களையும் ஒன்றிணைப்பதில் ஆளுநர்- வேந்தர் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.  வழங்கப்பட்ட காப்புரிமைகளின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு, NETJRF உதவித்தொகைகள் மற்றும் பல மாநில பல்கலைக்கழகங்களுக்கான மேம்பட்ட NIRF தரவரிசை ஆகியவை இந்த முயற்சிகளின் குறிப்பிடத்தக்க தாக்கத்தை வலியுறுத்துகின்றன.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.