10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி

 
rn ravi rn ravi

ஆளுநர் ஆர்.என்.ரவி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார்.

rn ravi

ஆளுநரிடம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 10க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு இருக்கின்றன. தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்த நிலையில் மீண்டும் சட்ட மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

MKstalin rn ravi

ஆளுநரை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் மசோதாக்களின் நிலுவையில் வைத்திருப்பது மிகவும் கவலைக்குரியது என்று உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும் ஆளுநர் அவற்றை திருப்பி அனுப்பி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதன் காரணமாக மீண்டும் இந்த சட்ட மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது