தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளை நிராகரிக்கும் ஆளுநர் - வைகோ கண்டனம்

 
vaiko

ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏஜெண்டாக  தமிழக ஆளுநர் செயல்படுகிறார்  என்று வைகோ விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம்(டி.என்.பி.எஸ்.சி.,) தலைவராக நேர்மையாளரான முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு அவர்களை நியமிக்குமாறு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது.

vaiko ttn

சைலேந்திர பாபு அவர்களுக்கு அந்தத் தகுதி இல்லை என்று தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் ரவி நிராகரித்திருப்பது அவரது அதிகார எல்லையை மீறிய தான்தோன்றித்தனமான சர்வதிகார முடிவாகும்.

vaiko

தமிழக அரசு செய்கின்ற பரிந்துரைகளை எல்லாம் நிராகரிக்கும் ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏஜெண்டாகச் செயல்படுகின்ற தமிழக ஆளுநருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.