சுவாமி விவேகானந்தரின் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

 
rn ravi rn ravi

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜ் பவனில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் இன்று நாடு கொண்டாடப்பட்டு வருகிறது. விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தலைவர்கள் பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர். விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை ராஜ் பவனில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய தேசியவாதத்தின் உச்சபட்ச  அடையாளமாகவும், இளைஞர்களுக்கு தேசத்தை கட்டியெழுப்புவதற்கான மிகப்பெரிய உத்வேகமாகவும் விளங்கும் சுவாமி விவேகானந்தர், உலக நன்மைக்காக பாரதத்தை அதன் இலக்கை நோக்கி தொடர்ந்து வழிநடத்துவார். அவருடனான தொடர்பை எந்தளவுக்கு அதிகமாக  கொள்கிறீர்களோ அந்தளவுக்கு , சுயத்துக்கும் சமூகத்துக்கும் செய்ய வேண்டிய பணிகள்  மூலம் தேசத்துக்கான கடமைகளை ஆற்றுவதில் நீங்கள் அதிக உற்சாகம் பெறுவீர்கள். காலனித்துவ மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் உண்மையான பெருமிதத்தையும் தேசிய விழிப்புணர்வையும்  ஏற்படுத்திய பாரதத் தாயின் மகனுக்கு எனது பணிவான மரியாதைகள் என குறிப்பிட்டுள்ளார்.