#BREAKING தமிழக ஆளுநர் ரவி மாற்றம்?

 
#BREAKING  தமிழக ஆளுநர் ரவி மாற்றம்? #BREAKING  தமிழக ஆளுநர் ரவி மாற்றம்?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் வெளியாகியுள்ளது. 

rn ravi

தமிழக ஆளுநரான ஆர்என் ரவிக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில் தான் சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி சார்பில் இந்தி மாத கொண்டாட்ட நிறைவு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்று பேசினார். முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்தில் "தெக்கணமும் அதிர்ச்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரிகள் மிஸ்ஸானது. இது சர்ச்சையை கிளப்பிய நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
 

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றாப்பட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் ராணுவ தளபதியுமான ஜெனரல் விகே சிங் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விகே சிங் தமிழகத்தில் பல தேர்தல்களில் மேலிட பொறுப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும் விகே சிங் பாஜகவில் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் லோக்சபா தொகுதியில் 2014, 2019ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.