ஆளுநர் ரவி விரைவில் மாற்றம்?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்தும், சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது, தன்னிச்சையானது எனத் தனது கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதலையும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக எதிர்ப்பு அலை கிளம்பியுள்ள நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.