"வள்ளுவரும் வள்ளலாரும் சனாதனத்தை விரட்டிய ஆதிக்குரல்கள்" - சு. வெங்கடேசன் எம்.பி

 
ttn

வள்ளலார் சனாதன தர்மத்தின் ஒளிரும் சூரியன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கு எம்.பி. சு. வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். 

rn ravi

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வள்ளலாரின் 200 ஆவது ஜெயந்தி விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 10 ஆயிரம் வருடம் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். வள்ளலார் சனாதன தர்மத்தின் ஒளிரும் சூரியன். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களை படித்தவன், அப்போது வள்ளலாரின் நூல்களை படித்தபோது மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியது.  எல்லா உயிர்களையும் நம்மில் ஒரு அங்கமாக பார்ப்பது தான் சனாதன தர்மம். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வரிகள் சனாதன தர்மத்தின் வெளிப்பாடு என்றார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "“மதித்த சமயதம் வழக்கெல்லாம் மாய்ந்தது, வர்ணாசிரமெனும் மயக்கமும் சாய்ந்தது” என்று சனாதனத்தை எதிர்த்த வள்ளலாரை சனாதனத்தின் உச்சநட்சத்திரம் என்கிறார்ஆளுநர்  ஆளுநர் அவர்களே வள்ளுவரும் வள்ளலாளரும் நீங்கள் விழுங்கவே முடியாத கலகக்குரல்கள். மட்டுமல்ல சனாதனத்தை விரட்டிய ஆதிக்குரல்கள். " என்று குறிப்பிட்டுள்ளார்.