ஆளுநர் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
78வது சுதந்திர தின விழாவையொட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற்றது.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு, சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நீதிபதிகள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் என 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அதிமுக சார்பில் முன்னாள அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்த நிலையில் இந்த ஆண்டு பங்கேற்றுள்ளார். அதேசமயம் திமுக கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன.